டிரைவரை தாக்கிய 2 வாலிபா்கள் கைது

திண்டிவனம் அருகே டிரைவரை தாக்கிய 2 வாலிபா்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-28 01:11 IST

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தாஸ் மகன் தெய்வகுமார்(வயது 26). சரக்கு வாகன டிரைவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் வாகனத்தை ஓட்டுவது தொடர்பான தொழில் போட்டியால் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று அங்குள்ள பெட்டிக்கடையில் உட்காா்ந்திருந்த தெய்வகுமாரை, பிரவீன் மற்றும் இவரது நண்பர்கள் மணிகண்டன்(27), கார்த்திக் (24) ஆகியோர் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரவீனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்