சட்டசபையில் நடந்தது என்ன? எதிர்க்கட்சிகள் புகாருக்கு விளக்கம் தாருங்கள்

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட அமளியில் சபாநாயகரின் மேஜை சாய்க்கப்பட்டது.

Update: 2017-02-19 20:00 GMT

சென்னை,

மைக் தூக்கி வீசப்பட்டது. எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் அளித்தனர். ஆளும் கட்சி தரப்பிலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் புகார் குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் கவர்னர் வித்யாசாகர் ராவ் விளக்கம் கேட்டு உள்ளார். அதற்கான கடிதம் நேற்று கவர்னர் மாளிகையில் இருந்து சட்டசபை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்