அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு

பேரறிவாளன் பரோலுக்கு ஆதரவு தெரிவிக்க கோரி பேரவையில் ஸ்டாலினை கருணாஸ், தனியரசு,தமீமுன் அன்சாரி சந்தித்தனர்

Update: 2017-06-23 09:26 GMT
சென்னை,

ராஜீவ் கொலை குற்ற வாளியான பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய மனு செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான  கருணாஸ், தனியரசு, தமிமுன்அன்சாரி ஆகிய மூவரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர அவர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் மூவரும் இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்கள். ஸ்டாலின் இருக்கை பகுதிக்கு சென்ற அவர்கள் இது தொடர்பாக பேச்சு நடத்தினார்கள். பிறகு  மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் மனு ஒன்றையும் கொடுத்தனர். மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்