குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு இல்லை; தமிழக அரசு

குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. #PresidentAwards

Update: 2018-04-30 16:20 GMT
சென்னை,

குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மொழிக்கு மட்டுமே 2004ல் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.  2008 முதல் சென்னையில் தமிழுக்கு என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது. 

இந்நிறுவனத்தால் தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள் பீட விருது இருவருக்கும், இளம் அறிஞர் விருது 5 பேருக்கும் வழங்கப்படுகிறது.  எனவே, குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்