வந்தே பாரத் ரெயில்: நாளை முதல் சோதனை அடிப்படையில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நிறுத்தம் அளிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஏ.சி. வசதி, பயோ டாய்லெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலுக்கு நாளை முதல் சோதனை அடிப்படையில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நிறுத்தம் அளிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.