சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புனிதநீர் தெளிக்கப்பட்டு நடை திறப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில், புனிதநீர் தெளிக்கப்பட்ட கோவில் நடை திறக்கப்பட்டது. #Samayapuram;
சமயபுரம்,
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் 10 வயதுடைய மசினி என்ற பெண் யானை உள்ளது. மேலும் தினமும் கோவிலில் யானை நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
இந்த கோவில் யானைக்கு பாகனாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 50) இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல மாகாளிகுடியில் இருந்து யானை குளிப்பாட்டி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். மேலும் கோவிலின் வெளியே மண்டபங்களில் 5 திருமணங்கள் நடந்தன. மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர்.
யானை திடீரென கோபம் கொண்டு பிளிறியது. மேலும் அருகில் இருந்த பாகன் கஜேந்திரனை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு காலால் பயங்கரமாக மிதித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு யானை முழுவதுமாக சாந்தமாகியது.
இந்நிலையில் வழக்கான இடத்தில் யானை கட்டி வைக்கப்பட்டது. கோவிலில் ஆகம விதிகளின் படி புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொண்ட பின் காலை 10 மணிக்கு நடை திறக்கப்பட்டது.