ஜனநாயகன் தணிக்கை விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்
ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்க சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தது. இதனால் ஜனநாயகம் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், இது தொடர்பாக பேசியதாவது;
மத்திய அரசு, தனது அதிகார பலத்தை கொண்டு எல்லோரையும் அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அரசியல் சூழ்ச்சிக்காக அவரை அடிபணிய வைக்க தணிக்கை குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவுகிறது. நடிகர் விஜய்யை நிர்பந்தப்படுத்த நினைக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.