எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. இழந்து நிற்கிறது பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை

தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்துவரும் கேலிக்கூத்தை பார்க்கும்போது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இழந்து நிற்கின்றது.

Update: 2018-05-31 21:04 GMT
சென்னை, 

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்துவரும் கேலிக்கூத்தை பார்க்கும்போது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இழந்து நிற்கின்றது. தமிழக சட்டசபையில் மிக முக்கியமான பிரச்சினை குறித்து விவாதங்கள் நடந்து வரும் வேளையில், அதனை சட்டசபையில் தெளிவாக ஆளும் கட்சிக்கு எதிராக விவாதிக்க வேண்டிய எதிர்க்கட்சி, தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித்திருக்கின்றார்களோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் தவறு இழைத்ததில் சம அளவு பங்கு கொண்டுள்ள காரணத்தினால் சட்டசபை விவாதங்கள் மூலமாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள் மனதில் மேலோங்கி நிற்கின்றது. அதற்கு இந்த கட்சிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்