கனமழை காரணமாக உதகை, கூடலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-12 02:35 GMT
கோவை,

தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக கர்நாடகம், கேரள பகுதிகளில் பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டப்பகுதிகளில் பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர் தாலுகா மற்றும் குன்னூர் தாலுகாவில் கேத்தி, எல்லநள்ளி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார்.

அதே போல் கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவையில் பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கோவை குற்றாலத்திற்கு தற்காலிகமாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்