தமிழகத்தில் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும் - தமிழிசை

‘Go Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #Tamilisai

Update: 2018-07-05 15:17 GMT
சென்னை,

மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

2003-ம் ஆண்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்துவிட்டதால், இதை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது.  

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.  'Go Back Modi' என சொன்ன தமிழகம் 'Come Back Modi' என சொல்லும் காலம் விரைவில் வரும்.  மேலும், சட்டசபைக்கு ஸ்டாலின் கிழிந்த சட்டை அல்லது கறுப்பு சட்டையுடன் மட்டுமே செல்வார் எனவும், தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை மூடுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்