டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியளித்து உள்ளார்.

Update: 2018-11-10 15:15 GMT
கோவை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்த பின்னரே மக்கள் மருத்துவமனையை நாடுகிறார்கள்.  மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலொழிய காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது.  தண்ணீர் தேங்காமல் அவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.

தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலையில்லை.  அவர்களுக்கு அதிகாரம், பதவியே முக்கியம்.  பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்