பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2018-11-12 11:56 GMT
சென்னை,

சென்னை கிண்டியில் மத்திய வேளாண்துறை மந்திரி ராதாமோகன் சிங்குடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை, திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மீனவர்களை எஸ்.டி. பிரிவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க அரசு முனைப்பு காட்டும். மத்திய அரசின் விருதுகளை தமிழக அரசு பெற்று வருகிறது.

கமல் விருப்பப்பட்டால் அவரது வீட்டிற்கு விருதுகளை அனுப்பி வைக்க தயார்.எத்தகைய இயற்கை இடர்பாடுகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்காக ரூ.1000 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்