பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை 181; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பெண்கள் பாதுகாப்புக்கான 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-10 05:38 GMT
சென்னை,

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு பலியானது நாட்டையே உலுக்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிப்பதற்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த சேவை டெல்லி, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 181 சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்து உள்ளார்.  இதனை அடுத்து இந்த மையம் இன்று முதல் செயல்பட உள்ளது.

மேலும் செய்திகள்