சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைவு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85 ஆக விற்பனையாகிறது.

Update: 2018-12-29 01:07 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக  பெட்ரோல் விலை இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து ரூ.71.85 ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.66.84 ஆக  விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும் செய்திகள்