அதிமுக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது

Update: 2019-01-03 12:20 GMT
சென்னை,

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று தொடங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
 
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., அறிவித்திருந்தது. இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் நேற்றும், இன்றும் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தனர். இன்று பெறப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பரிசீலனை நடைபெறும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்