1,800 செவிலியர்கள் விரைவில் நியமனம் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு, பன்றி காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் முழுகட்டுப்பாட்டில் உள்ளது.

Update: 2019-01-31 20:23 GMT
வேலூர், 

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு, பன்றி காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் முழுகட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் புற்று நோய்க்கான மருந்து உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் 3 மாதத்துக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன.

சுகாதாரத்துறை மூலம் 1,800 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ரத்த வங்கிகளில் உள்ள ரத்தமாதிரிகளை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்கள் குறித்து 104 என்கிற எண்ணில் புகார் தெரிவித்தால் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் தற்போது தாய், சேய் இறப்பு விகிதம் 62 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்