தொலைபேசியில் முத்தலாக் விவாகரத்து: கணவர் மீது திண்டுக்கல் கலெக்டரிடம் பெண் புகார்
தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் கூறி உள்ளார்.;
திண்டுக்கல்
கர்நாடகாவைச் சேர்ந்த பரக்கத் பானு என்ற பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில் திண்டுக்கலை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும், தற்போது ஒன்றரை வயதில் குழந்தை இருக்கும் நிலையில், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன், தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறி உள்ளார்.