தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - ஸ்டாலின்

தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-23 16:08 GMT
சென்னை,

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்றத்தினர் தி.முக.வில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்பதை பட்டியலிட்டு கூற முடியுமா? குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் தி.முகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம். 

மீண்டும் கூறுகிறேன் தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு இரங்கல் கூட்டமாவது நடைபெற்றுள்ளதா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்