இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி

969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

Update: 2019-03-10 21:00 GMT
சென்னை, 

969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மனிதநேய மையம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் மனிதநேய மையம் பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 3 ஆயிரத்து 319 பேர் தேசிய மற்றும் மாநில அளவில் உயர் பதவிகளில் உள்ளனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (டி.என்.யூ.எஸ்.ஆர்.பி.) 969 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாக திறம்பட பயிற்சி அளிக்க உள்ளது.

இலவச பயிற்சி

இந்த தேர்வு எழுத உள்ள தேவையான அனைத்து தகுதிகளுடைய ஆர்வலர்கள் அனைவரும் இலவச பயிற்சி பெற www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்துவிட்டு, www.mntfreeias.com என்ற மனிதநேய மைய இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11-ந் தேதி (இன்று) முதல் சென்னை சி.ஐ.டி. நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய மையத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படத்துடன் நேரிலோ, 044-24358373, 24330952 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் தேர்வுகள், பாடப்புத்தகங்கள், பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் பயிற்சி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்