பரோல் கேட்டு நளினி மனு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனு மீது நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய நளினியின் மனு மீது, ஜூன் 11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-15 08:29 GMT
சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்