ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்- தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இணக்கமான சூழ்நிலையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-30 11:54 GMT
தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆலையின் சமுதாய வளர்ச்சிப்பிரிவின் சார்பில் ஸ்மார்ட் ஸ்கூல் திட்டமான தாமிர வித்யாலயா என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் கீழ் 2300 மாணவர்களுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் குமார், ஸ்டெர்லைட் ஆலை வளர்ச்சியில் தூத்துக்குடி மக்களின் வளர்ச்சியும் இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இணக்கமான சூழ்நிலையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்