நீர்மட்டம் 42.32 அடியாக குறைந்தது: மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதி வறண்டது

மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதமாகவே நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது.

Update: 2019-07-09 00:04 GMT
மேட்டூர்,

கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதமாகவே நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்பட 12 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 42.32 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 236 கனஅடியாக இருந்தது. இதனால் அணையின் இடதுகரை பகுதியான 16 கண் பாலம் பகுதி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் அளித்தாலோ அல்லது வருண பகவான் கைகொடுத்தால் மட்டுமே டெல்டா பாசன பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெறும், என்று கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்