கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2019-07-16 06:59 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகள், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்றைய கூட்டத்தொடரில், பேரவை விதி 110ன் கீழ், கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்