தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி -12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சை கருத்து

தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2019-07-26 10:48 GMT
சென்னை,

12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என அச்சிடப்பட்டடு உள்ளது. கி.மு. 300 ஆண்டுகள்  பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய கீதமே தவறாக குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பல வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் பிழையான கருத்து மற்றும் தகவல்கள் காணப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பாரதியார் காவி  தலைப்பாகை அணிந்துள்ளது போல படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என குறிப்பிடப்பட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்