அலங்கார விளக்குகளுக்கு வீண் செலவு ஏன்? பழுதடைந்த பஸ்களை அரசு சரி செய்யலாமே? ஐகோர்ட்டு கருத்து

அலங்கார விளக்குகளுக்கு வீண் செலவு ஏன்? பழுதடைந்த பஸ்களை அரசு சரி செய்யலாமே? என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-07-27 17:33 GMT
சென்னை, 

சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஒன்றை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், அரசு வக்கீலிடம், ‘சென்னையில் புதிதாக இயக்கப்பட்டு வரும் மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பல வண்ணங்களில் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

இது எதிர் திசையில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும், இதுபோன்ற அலங்கார விளக்குகளுக்கு வீண்செலவிடுவதைவிட, பழுதடைந்துள்ள பழைய பஸ்களை சரிசெய்து இயக்கினால் பயணிகளுக்கு பெரும் பயனாக இருக்கும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள்’ என்று கருத்து கூறினர்.

மேலும் செய்திகள்