பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Update: 2019-08-17 13:56 GMT
சென்னை,

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது.   இந்த பால் கொள்முதல் விலை  உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

பால் விலை உயர்வு குறித்து  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்