குடிநீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.

Update: 2019-08-21 14:05 GMT
சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். சமீபத்தில் திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில்,  அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும்,  உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப்  போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதற்கிடையே, தண்ணீர்  லாரிகள் உரிமையாளர்கள் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்