"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, முதலமைச்சர் திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்று, பூங்குன்றன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2019-09-11 12:39 GMT
சென்னை,

ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது உதவியாளரான பூங்குன்றன், அரசியலில் இருந்து விலகி ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவிதை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய், ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்; தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே ! தமிழனாய் உனை வரவேற்கிறேன் என முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டவர் பூங்குன்றன் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.

மேலும் செய்திகள்