தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தார்.
சென்னை,
2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுகின்றனர். தற்போது, கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சீன அதிபர் ஜி ஜின்பிங் காரில் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னதாகவே, மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை , தோளில் துண்டுடன் வருகை தந்துள்ளார். வேஷ்டி சட்டையில் நடந்து வந்து கலைசிற்பங்களை பிரதமர் மோடி ரசித்து வருகிறார்.