வெடிகுண்டு மிரட்டல் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

Update: 2019-12-19 11:14 GMT
சென்னை 

நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டறைக்கு மொபைல் போனில்  பேசிய மர்ம நபர், குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது என்றும், தலைமைச் செயலகம், முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் கோவையிலிருந்து பேசியது தெரிய வந்துள்ளதாகவும், அந்த நபரை பிடிக்க கோவையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மிரட்டலை தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தலைமைச் செயலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பிறகே  அனுமதிக்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பும்  கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்