அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தீவிர ஆலோசனை நடந்தது.

Update: 2020-02-03 22:45 GMT
சென்னை, 

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் வசந்தாமணி உள்பட மருத்துவதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் முடிந்தவுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் இதைப்போன்று ஆலோசனை கூட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்