அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-21 13:43 GMT
சென்னை,

அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.  

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா வந்திருப்பது மன வேதனை அளிக்கிறது அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும்.  பத்திரிகையாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கொரோனா சோதனை செய்யவேண்டும். 

செய்திகளை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.  சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்திவைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை திறந்து சுங்க கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனிதநேயமற்ற செயல்.  ரேஷனில்  அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்