நாட்டின மாடுகள், நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

நாட்டின மாடுகள், நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Update: 2020-06-28 12:10 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1022 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இன்று தலைவாசலில் நடைபெற்று வந்த கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி:-

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா இதுதான் என்றும் நாட்டின மாடுகள், நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

மேலும் நூலக கட்டடம், மாணவர் விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்