மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-07-24 08:39 GMT
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் தற்போது படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், கல்வி நிறுவனங்கள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடப்பாண்டு கல்வி நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்ததாக தகவல் பரவியது. இது தொடர்பாக சில பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கை தொடர்பான தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது.

ஆகஸ்ட் 3-ல் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது தவறான தகவல் என்றும், மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.  ஆகஸ்ட் 3-ல் மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்