தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை சிறப்பு ரெயில் சேவை ரத்து

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2020-08-14 08:43 GMT
சென்னை,

கொரோனா  பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரெயில், விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. எனினும், சிறப்பு ரெயில்கள் மட்டும்  குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்படாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.   இந்த நிலையில், சிறப்பு ரெயில்கள் சேவை தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இயக்கப்படாது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அனுப்பப்படும். கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்கள் பயண தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் கட்டணத் தொகையை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்