சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாதங்களே என்னுடைய வாதம் - ஐகோர்ட்டில் கு.க.செல்வம் சார்பில் கோரிக்கை
சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாதங்களே என்னுடைய வாதம் என்று ஐகோர்ட்டில் கு.க.செல்வம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணையபோவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நீக்கினார். இதற்கிடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டசபைக்குள் கொண்டு வந்ததாக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கு.க.செல்வமும் ஒருவர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் முன்பு கடந்த வாரம் 3 நாட்கள் விசாரணை நடந்தது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை என்று கூறினர். இதையடுத்து கு.க.செல்வத்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்தநிலையில், கு.க.செல்வம் சார்பில் வக்கீல் பாலஅரிகிருஷ்ணன் ஆஜராகி, “தி.மு.க. உறுப்பினர்களின் தரப்பு வாதங்களையே கு.க.செல்வம் தரப்பு வாதங்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “3 நாட்களாக அந்த வழக்கை விசாரித்தோம். அப்போது கு.க.செல்வம் எங்கே போய் இருந்தார்? யாருமே ஆஜராகாததால், கு.க.செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து விட்டோம். எனவே, தி.மு.க. உறுப்பினர்களின் வாதத்தை தன்னுடைய வாதமாக ஏற்றுக்கொள்ளும்படி புதிதாக ஒரு மனுவை கு.க.செல்வம் தாக்கல் செய்யவேண்டும்’ என்றனர்.