புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக விஞ்ஞானி பரசுராமன் நியமனம் - துணை ஜனாதிபதி உத்தரவு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக விஞ்ஞானி பரசுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2020-08-22 03:37 IST
சென்னை,

துணை ஜனாதிபதி அலுவலகத்தின் இணை செயலாளர் அசோக் தேவன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மித்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

துணை ஜனாதிபதியும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வெங்கையா நாயுடு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான என்.பரசுராமன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் உன்னம் வெங்கையா ஆகிய 2 பேரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்து இருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்