தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2020-09-06 08:26 GMT
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை. பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல், வாந்தி அறிகுறி இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆம்புலன்சுகள் 1005 ஏற்கனவே உள்ளன. புதிதாக 500 ஆம்புலன்சுகள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக நடமாடும் ஆம்புலன்சுகளில் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்