தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்தது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-10-17 06:49 GMT
சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தின் விலையில் கடந்த இரண்டு நாளில் நல்ல சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தங்கம் விலை அதிகரிக்கவும் குறையவும் முக்கிய காரணம், அமெரிக்க பொருளாதாரம், கச்சா எண்ணெய் மதிப்பு, தங்கத்தின் இறக்குமதி போன்றவை ஆகும். பொருளாதார மந்த நிலையின் போது மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கத்தின் விலை விறுவிறுவென அதிகரிக்கும். ஆனால் அமெரிக்க பொருளாதாரமும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கினால் தங்கத்தில் செய்த முதலீட்டை எடுத்து அதில் போடுவார்கள் என்பதால் அப்போது சரசரவென குறையவும் செய்யும். ஆனால் பெரிய அளவில் தங்கத்தின விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது.

தங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை  ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.183 குறைந்து, ரூ.4,680 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.65,400 ஆகவும் உள்ளது.

மேலும் செய்திகள்