இலவச கொரோனா தடுப்பூசி மக்களுக்கு காட்டும் சலுகை என்று முதல்வர் நினைக்கிறாரா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-22 16:25 GMT
சென்னை,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்தில் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மக்களுக்கு மருத்தை இலவசமாக தர வேண்டியது அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை இலவசமாக தருவது மக்களுக்கு காட்டும் சலுகை என்று முதலமைச்சர் நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “மக்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி அளிக்க மனமில்லாத முதல்வர் தன்னை தாராளப் பிரபுவாக காட்டிக்கொள்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்