கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Update: 2020-10-29 04:37 GMT
கோதாவரி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டாகிராமத்தை  சேர்ந்தவர்கள் வேலருபாடு மண்டலத்தில் வசந்தவாடா கிராமத்திற்குச் சென்று ‘வனபோஜனம்’ (காட்டில் விருந்து) கொண்டாட, தாசரா பண்டிகைக்குப் சென்று உள்ளனர்.

அப்போது கிழக்கு கோதாவரி ஆற்றில் 6 சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். .

நீரில் மூழ்கத் துவங்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்பதற்குள், அனைவரும் நீரில் மூழ்கி விட்டனர். 6 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி ஆறு பேரின் இறந்த உடல்களையும் மீட்டனர். ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

15 முதல் 16 வயதிற்குட்பட்ட ஆறு சிறுவர்களின் விவரம் தெரியவந்து உள்ளது. கங்காதர வெங்கட ராவ் (16), சிரமுலா சிவாஜி (16), கூனவரபு ராதாகிருஷ்ணா (15), கோட்டுபர்த்தி மனோஜ் (16), கர்நதி ரஞ்சித் (15), கெல்லா சாய் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்