செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றம்: தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றம் காரணமாக தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Update: 2020-11-25 20:17 GMT
சென்னை, 

நிவர் புயலை முன்னிட்டு சென்னையில் நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதையடுத்து சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி ஆளத்தை எட்டியது. இதையடுத்து 1000 கன அடி அளவுக்கு தேங்கி உள்ள நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கடலுக்கு செல்லும் வழியில், உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. மேலும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆல்பி ஜாண் வர்கீஷ் உத்தரவின்பேரில், அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பஸ் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்