தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2020-11-25 20:50 GMT
சென்னை,

புதுச்சேரி வடக்கே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறியது. புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில்  கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும்.

மேலும் அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்