தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-04 20:00 GMT
சென்னை, 

கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தை சேமிப்பதற்கான வசதிகள் மேற்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் என அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பு மருந்துகளை உரிய பாதுகாப்புடன் சேமிக்க முடியும். இதனால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்