குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? - கமல்ஹாசன் கேள்வி

குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2021-01-26 05:49 GMT
கோப்புப்படம்
சென்னை, 

கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மக்கள் ஒரே நேரத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதன்படி மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை நடத்தப்படவில்லை. இதனைத்தொடர்ந்து குடியரசு தினமான இன்றும் (ஜனவரி 26) கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?” என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்