விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2021-02-12 06:19 GMT
உடுமலைப்பேட்டை, 

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இன்று  தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கூறியதாவது:  விவசாயிகள் மேலும் பயனடையும் வகையில் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்.  

குடிமராமத்து திட்டம் மூலம் 6,011 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்" என்றார். 

பிரசாரத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் காங்கிரஸ் ஆட்சியில் திமுகதான் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது" எனவும் கடுமையாக சாடினார். 

மேலும் செய்திகள்