தொகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலை கேட்டு தி.மு.க. வழக்கு

தொகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் பட்டியலை கேட்டு தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.

Update: 2021-02-16 01:45 GMT
சென்னை, 

வருகிற சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பிலும், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “இறுதி வாக்காளர் பட்டியலை பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. இதன்படி தொகுதிவாரியாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளின் விவரப் பட்டியலை வழங்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, பட்டியலை வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்