மதுரை சித்திரை திருவிழா பற்றி தவறான தகவலை வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை - கோவில் நிர்வாகம்

மதுரை சித்திரை திருவிழா பற்றி தவறான தகவலை வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-04-07 22:44 GMT
மதுரை,

இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா நடத்தப்பட உள்ள விவரங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் கோவில் நிர்வாகத்தின் மூலம் மட்டுமே வெளியிடப்படும். ஆனால் யூடியூப் சேனல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சித்திரை திருவிழா தொடர்பான நிகழ்ச்சி நிரல், விவரங்கள் கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியிடப்பட்டதல்ல. 

எனவே சமூக வலைதளத்தில் கோவில் நிர்வாகம் அனுமதியின்றி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா பற்றிய தகவல்கள் வெளியிடக்கூடாது. தவறான தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்