கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் -சென்னை ஐகோர்ட்

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-26 12:25 GMT
சென்னை

கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில்  நடைபெற்றது. அப்போது  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என்றார்.

அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு காரணம் என்றும், பிரசாரம் பரபரப்பாக நடந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று அவர் வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” என்றும் எச்சரித்தார்.     

மேலும் செய்திகள்