தனிப்பாதைகளை அதிகரித்து சென்னையில், சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

தனிப்பாதைகளை அதிகரித்து சென்னையில், சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

Update: 2021-06-03 20:21 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

உலக சைக்கிள் தினம் இன்று (நேற்று) கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் முடிந்தவரை சைக்கிள் பயணத்தை கடைப்பிடிக்க இந்த நாளில் உறுதியேற்போம். சைக்கிள் பயணம் உடல்நலன், பொருளாதார நலன், சுற்றுசூழல் நலன், விபத்தில்லா போக்குவரத்து அனைத்துக்கும் வழிவகுக்கும்.

சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையில் சைக்கிள் போக்குவரத்துக்கான தனிப்பாதைகளை அதிகரிக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் வாடகை சைக்கிள் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க அனைத்துப் பிரிவினருக்கும் அவற்றை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். அதற்கான செலவை ஈடுகட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீதான வரிகளை உயர்த்துவதில் தவறு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்